Main Menu

ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்

ரஷிய நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின்உற்பத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம், பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, மிகப்பெரிய சாதனை என பெருமிதம் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, மின்திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...