பிணைமுறி மோசடி; நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியுள்ளார்.
அண்மையில் இதுதொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் உட்பட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.