Main Menu

பஸ் – லொறி மோதிய கோர விபத்தில் 26 பேர் காயம்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை இரட்டைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். 

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியும் மோதியதில்  விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் லொறி சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த 25 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...