பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக்க நடவடிக்கை!

பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.
பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பரிஸை பசுமையாக்கும் திட்டமும், மிதிவண்டிகளுக்கு மேலும் முன்னுரிமை கொடுப்பது உள்ளிட்ட 14 வசதிகள் பரிஸில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அவற்றில் ஒன்று தான் பிளாஸ்ரிக்கை முற்றாக ஒழிக்கும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுகுறித்த திட்ட வரைபுகள் எதிர்வரும் 25ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பகிரவும்...