பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும்
இம்மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு( என் ஐபி) இலங்கையின் காவல்துறைமா அதிபருக்கு இத் தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தது. குறித்த அறிக்கையினை காவல்துறைமா அதிபர் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதியோ குறித்த அறிக்கை தொடர்பில் எவ்வித முன்னாய்த்த நடவடிக்கையினையோ, பாதுகாப்பு ஏற்பாடுகளையோ மேற்கொள்ளவில்லை என்றும் இதன் காரணமாகவே மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி தனது பதிவியை இராஜினாமம் செய்ய வேண்டும் எனவும் நாட்டு மக்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர்,, போன்ற நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்விடயத்தில் பொறுப்பேற்று தனது பதவி விலக வேண்டும், என்றும் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு புலனாய்வுப் பிரிவு எற்கனவே கொண்டு சென்ற நிலையில் அவர் பொறுப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட 290 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, 450 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.