பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து யாழில் விசேட கலந்துரையாடல்

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் பிரதான உரையினை முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சேனாதீர குணத்திலக ஆற்றவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால், நாற்பது ஆண்டுகளாக அமுலில் உள்ள, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக அமுல்படுத்தப்படவுள்ள மிகவும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக முழுமையாக ஆராயவுள்ள இந்த உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !