பயங்கரமான தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல் படுத்தப்பட வேண்டும் – சட்டத்தரணி அகலங்க உக்வத்த
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கிடைகின்ற முறைப்பாடுகளை பிரதேச மற்றும் வட்டாரசபை மட்டத்தில் கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக நோக்கினால் தேர்தல் சட்டமீறல்களில் துரித அதிகரிப்பு காணப்படுகின்றது என சட்டத்தரணி அகலங்க உக்வத்த தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கிடைகின்ற முறைப்பாடுகளை பிரதேச மற்றும் வட்டாரசபை மட்டத்தில் கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக நோக்கினால் தேர்தல் சட்டமீறல்களில் துரித அதிகரிப்பு காணப்படுகின்றது.தேர்தல் சட்டங்களை மீறுதல் பற்றிய 392 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, சட்டவிரோதமான பிரச்சாரம் 186, சட்டரீதியான தேர்தலுக்கு தடையேற்படுத்துதல் 06, வன்செயல்கள் 30, மக்கள் அபிப்பிராயத்திற்கு முறையற்ற அழுத்தம் பிரயோகித்தல் 120, அரச வளங்களின் முறையற்ற பாவனை 73 மற்றும் அரச உத்தியோகத்தர்களை பாவித்தல் 39 என்றவகையில் பதிவாகியுள்ளது.சமூக ஊடகங்களை பாவித்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை மையப்படுத்தி பாரிய சேறுபூசுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடமென உணர்த்தக்கூடியவகையில் தயாரித்த போலியான தகவல்களையும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தியும் தொகுத்தமைத்து தயாரித்த காணொளிகளைப்போன்றே தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் பெயரில் தயாரித்த போலியான மருத்துவ அறிக்கை போன்றவற்றை பிரசுரித்துள்ளார்கள்.அந்த மருத்துவ அறிக்கை உண்மையானதென காட்டுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கடிதத்தலைப்பின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி சுனில் வட்டகலவின் போலியான கையொப்பத்துடன் தயாரித்த போலியாவணத்தையும் சமூகமயப்படுத்தி உள்ளார்கள். அது சம்பந்தமாக புலன்விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடக முறைப்பாடுகள் பிரிவிற்கு விடயங்களை முன்வைத்தோம்.தேர்தல்கள் சட்டம் மாத்திரமன்றி அதற்கு அப்பால்சென்ற தண்டனைச் சட்டக்கோவையில் காட்டப்பட்டுள்ள போலியாவணம் புனைதல் எனும் குற்றச்செயலையும் புரிந்துள்ளார்கள். போலியான மருத்துவக் குறிப்பினை பிரசுரித்த பின்னர் ஆசிரி வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ “பேஸ் புக்” தளத்திலிருந்து மும்மொழியிலும் அறிவித்தல்களை விடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவக் குறிப்பு போலியானதென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இந்த போலியான குறிப்பினை தொலைக்காட்சி உரையாடலொன்றின்போதும் காட்டுவதற்காகவும் பிரயோகித்தார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிஸில் முறைப்பாடு செய்தாலும் அவற்றை தடுத்து நிறுவத்துவதற்காக தெளிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை புலனாகவில்லை.நியாயமான தேர்தலொன்றை நடத்துவது மாத்திரமன்றி அதற்காக பின்புலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். தேர்தல்கள் சட்டத்தை ஒருபுறம் வைத்தாலும் சாதாரண சட்டம் சீராக அமுலாக்கப்படுகின்றதென நாங்கள் நல்லெண்ணத்துடன் நம்பிக்கை வைத்திருக்கிறோம். “புதிய பாதை தேசிய இயக்கம்” எனும் அமைப்பினை உருவாக்கிக்கொண்ட ஒருவர் அதன் செயலாளராக அனில் சாந்த பர்னாந்து என்ற பெயரில் தோற்றி, ஊடக கலந்துரையாடலொன்றையும் நடாத்தினார்.அவர் 21 ஆந் திகதிக்குப் பின்னர் மதம்சார் வன்முறையொன்று வருமெனவும் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை சேகரித்து வருவதாகவும் பாரதூரமான ஒரு கூற்றினை வெளியிட்டுள்ளார். இல்லாத பீதிநிலையை சமூகத்தில் உருவாக்கிட முயற்சிக்கின்ற அவர்கள் தேர்தல்கள் சட்டத்திற்கும் அப்பால்சென்ற சிவில் மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தை (ஐ.சீ.சி.பி. ஆர்.) மீறுவதில் ஈடுபட்டுள்ளார். மக்கள் மத்தியில் சமூக சகவாழ்வினை இல்லாதொழிக்க மேற்கொள்கின்ற முயற்சியாகும். இந்த சர்வதேச சமவாயத்திற்கிணங்க இந்த நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை எவ்வளவு பலம்பொருந்தியதாக அமுலாக்கினார்கள் என்பது கடந்த காலங்களில் நன்றாகவே சித்தரிக்கப்பட்டது. சமூகத்தில் சட்டத்திற்கிணங்க நடந்துகொள்ளத் தெரியாவிட்டால் அந்த ஆட்களை சட்டத்தினால் கட்டிப்போட வேண்டும். தமது மண்டைகளில் இருக்கின்ற திரிபுநிலைகளை சமூகமயப்படுத்தி மற்றவர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற வகையில் நடந்துகொள்வார்களாயின் இது ஒரு பாரதூரமான நிலைமையாகும். அமைதியான சுயாதீனமான தேர்தலுக்கான சுற்றுச்சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளவேளையில் இவ்வாறான ஆட்கள் மேற்கொண்டு வருகின்ற திகிலூட்டுகின்ற பிரச்சாரங்கள் சம்பந்தமாக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படல் வேண்டும். இவ்வாறான செயல்கள் தொடர்பில் நாட்டில் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.கடந்த 07 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாட்டுக்கு நாடு பூராவிலும் பரந்துள்ள சட்டத்தரணிகள் வருகைதந்திருந்தவேளையில் ஒரு போத்தல் தண்ணீர் மாத்திரமே கொடுத்தோம். எனினும் அன்றைய தினம் மாலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சந்திப்பின் பின்னர் இராப்போசன விருந்து மதுபானத்தை உள்ளிட்டதாகவே வழங்கப்பட்டது. அது சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாங்கள் அதனை நடாத்துவதற்கு முன்னராகவே முறைப்பாடு செய்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காலைவேளையில் 2,800 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட எமது சட்டத்தரணிகள் மாநாடு நடாத்தப்பட்ட போதிலும் மாலையில் அவர்கள் அதே வளவில் நடாத்திய மாநாட்டில் தேர்தல் சட்டத்தை மீறி செயலாற்றி உள்ளார்கள். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின்படி சனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் நியாயமாக நடந்துகொள்வார்களென நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேர்தல் சட்டத்தைப்போன்றே தண்டனைச் சட்டக்கோவையையும் மீறுதல் தொடர்பில் அந்த நிறுவனம் கடுமையாக இயங்கிவருமென நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.