பதாகைகளுடன் சாலையின் ஓரம் கூட்டம்…தீர்வு வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலத்தின் விமான நிலையம் அருகே சிலர் பதாகைகளுடன் நின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காரணம் அறிய தனது காரை நிறுத்தினார்.
ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினம் விமான நிலையம் அருகே உள்ள சாலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது இளைஞர்கள் சிலர் பதாகைகளுடன் நின்றுக் கொண்டிருப்பதை கண்டார்.
உடனடியாக தனது காரை நிறுத்தி இறங்கினார். அவர்களிடம் என்ன பிரச்சனை என கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ஜெகனை சூழ்ந்துக் கொண்டு நடந்ததை விவரித்தனர்.
அவர்கள் கூறுகையில், ‘எங்கள் நண்பன் நீரஜ் கேன்சரால் பாதிக்கப்பட்டார். குடும்ப வறுமை மற்றும் பணம் இல்லாத காரணத்தினால் மிகவும் கஷ்டப்படுகிறான். அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி நிற்கிறோம்’ என கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக அந்த நோயாளிக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அது அனைத்தையும் செய்து விடுங்கள் என மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவை கலக்கி வருகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.