Main Menu

பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்!

பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி 14ஆம் திகதி கெய்விற்கும், பெப்ரவரி 15ஆம் திகதி மாஸ்கோவிற்கும் செல்வார்.

நேட்டோ உக்ரேனுக்கு விரிவடைவதைத் தடுக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை சீனா ஆதரித்த நிலையில், உக்ரேனியப் படைகளின் தாக்குதலை ரஷ்யா ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு விரிவான சதித்திட்டத்தை வியாழனன்று கிரெம்ளின் செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியதை அடுத்து, இந்த உயர்மட்ட விஜயங்கள் வந்துள்ளன.

நேட்டோவில் பிரான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் சாத்தியமான ரஷ்ய நடவடிக்கைக்கான கூட்டணியின் தயாரிப்பின் ஒரு பகுதியாக துருப்புக்களை ருமேனியாவிற்கு நகர்த்துகிறது.

மக்ரோனும் புட்டினுடன் உரையாடல்களுக்கு தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறார். மேலும் சமீபத்திய வாரங்களில் அவருடன் பலமுறை பேசினார். இருவரும் திங்கள்கிழமை ஒருவரையொருவர் சந்திப்பார்கள் என்று மக்ரோனின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவினால் குறிப்பிடத்தக்க சலுகைகள் எதுவும் பெறாத பல வார கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பயணங்கள் எந்தளவு விளைவை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இதுகுறித்து கூறுகையில், ‘உயர்மட்ட வருகைகள் பாதுகாப்புத் துறையில் உள்ள சவால்களை தீவிரமாகக் குறைக்கின்றன மற்றும் கிரெம்ளினின் திட்டங்களை சீர்குலைக்கும்’ என்று கூறினார்.

இதனிடையே ரஷ்ய இராணுவக் கட்டமைவு மற்றும் போர் மீதான இராஜதந்திரத்தை தொடர ரஷ்யாவை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் பற்றி விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அழைப்பு விடுத்தார்.