‘பகைமைக்கு எதிரான மணித்தியாலம்’ மக்கள் மத்தியில் அன்பைப் பரப்பும் நிகழ்வு ஆரம்பம்
நாட்டின் அனைத்து இன மக்கள் மத்தியிலும் அன்பைப் பரப்பி புதிய இலங்கையை நோக்கிச் செல்லும் பயணம் மாத்தறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அடிப்படைவாதிகள், இனவாதிகள், சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக மாத்தறை மக்கள் ஏற்பாடு செய்த ‘பகைமைக்கு எதிரான மணித்தியாலம்’ என்ற தலைப்பிலான நிகழ்வு நேற்று மாத்தறை பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதில் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் கலந்துக்கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வை மாத்தறைக்கு மாத்திரம் வரையறுக்காமல் தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை வரை முன்னெடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மாத்தறை மக்கள் எப்போதும் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் எதிராக செயற்பட்டு ஒருமித்த இலங்கைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் பகைமையை ஏற்படுத்துவதற்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்ட சிலர் முயற்சிக்கின்றனர். அபிவிருத்தி என்பது ஓர் இனத்திற்கோ, மதத்திற்கோ வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.
இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் விஹாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாத்தறை பிரதேசத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்அனைத்து இனத்தவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.