நெதர்லாந்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – 5 பேர் உயிரிழப்பு
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்றுமாலை 06:15 அளவில் ஹேக் நகரின் தர்வேகாம்ப் பகுதியில் இடம்பெற்ற மூன்று மாடிகள் கொண்ட குறித்த கட்டடத்தில் தீயணைப்பு படையினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த சம்பவத்தில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என நெதர்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் 5 அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதமடைந்ததாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பகிரவும்...