நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: 17 வீரர்களைக் கொண்ட உத்தேச இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அங்கு செல்லும் இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்காக எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை அணி, நியூசிலாந்து செல்லவுள்ளது.

இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான 17 வீரர்களைக் கொண்ட உத்தேச இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் லஹிரு திரிமான்ன, நுவன் பிரதீப், லஹிரு கமகே ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்த அணியில், தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்ன, தனன்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெதியூஸ், ரொஷேன் சில்வா, சதீர சமரவிக்ரம, நிரோஷன் டிக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லக்ஷான் சந்தகென், சுரங்க லக்மால், லஹிரு கமகே, கசுன் ராஜித, நுவன் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணி உத்தேச அணியே என்ற போதிலும், இத்தொடருக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை;
இந்த அணியில் கடந்த 23ஆம் திகதி பிரிஸ்பேனில் உள்ள ஆய்வு மையத்தில் தனது பந்துவீச்சு பரிசோதனையை மேற்கொண்ட அகில தனன்ஞய, விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் அவர், எனினும், ஐ.சி.சியின் அறிக்கை அகிலவுக்கு சாதகமாக கிடைத்தால் அந்த அணியுடனான ஒரு நாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிற்காக அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்ற சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர மற்றும் கசுன் ராஜித ஆகிய மூவருக்கும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

இதேநேரம், உடற்தகுதியை நிரூபிப்பதில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் மற்றும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் அணியில் இடம்பிடித்து ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட லஹிரு குமாரவுக்கும் இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

100 நாட்கள் கொண்டதாக வெளிநாட்டு மண்ணில் இடம்பெறுகின்ற 3 கிரிக்கெட் தொடர்களில் நியூசிலாந்து அணியுடனான தொடரை தொடர்ந்து, அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !