Main Menu

நாளை தீபாவளி பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழசை சவுந்தரராஜன், “மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளை வெடித்து கொண்டாடுங்கள்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் எம்.பி. சரத் குமார், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.சி.சேகர், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பா.இசக்கி முத்து, மாநில தலைவர் டாக்டர் ஆ.மணிஅரசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...
0Shares