நான்கு நாள் விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதியில் இருந்து நேற்று காலை ஆறுமணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 31 விபத்துக்களில் இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.