நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த இஸ்ரேல் பரீசிலணை!
இஸ்ரேலில் பொதுமக்களுக்கு நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த, அரசாங்கம் பரீசிலணை செய்து வருகின்றது.
அடுத்தடுத்த தொற்று அலைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்காவது அளவு தடுப்பூசியை செலுத்தலாம் என மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பூஸ்டர் அளவாக அதாவது மூன்றாவது தடுப்பூசி அளவாக கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்நாட்டில் 25 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதனிடையே தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த அரசாங்கம் பரீசிலணை செய்து வருகின்றது.
இதனிடையே இஸ்ரேலில் 80 சதவீதம் பேருக்கு இதுவரை இரண்டு அளவு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.