நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை தொடரும் என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் அறிவித்துள்ளார்.
‘அவசர காலத்தின் நீடிப்பு அவுஸ்ரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு வழங்கிய சிறப்பு மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆலோசனைகளால் தெரிவிக்கப்பட்டது’ ஹன்ட் கூறினார்.
இந்த காலத்தில், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள், கடல் சரக்கு மற்றும் படகுகள், அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.