நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது – மோடி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஏழாவது சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியா உள்பட உலகம் முழுவதும், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர்.
இலட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகாவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். யோகா ஆரோக்கியத்துக்கானது என்பதை மக்கள் அறிந்திருக்கின்றனர்.
இன்பத்திலும், துன்பத்திலும் சமமாக இருக்க வேண்டும் என்பதை ரிஷிகள் கற்றுக்கொடுத்திருக்கின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.