தௌஹித் ஜமாத்தின் இறுவட்டுகள்
தௌஹித் ஜமாத் போதனைகள் அடங்கிய இறுவட்டுகள் தௌஹித் ஜமாத் அமைப்பின் உரைகளை உள்ளடக்கிய ஒரு தொகை இறுவட்டுகள் பொலிஸ் விஷேட அதிரடி படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி அப்புகஸ் தலாவ என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடி படையினால் தெரிவித்துள்ளது.
கம்பளை முகாம் அதிகாரிகளினால் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைப்பற்றபட்டதுடன் மேலதிக விசாரணைக்காக இந்த இறுவட்டுகள் நாலவப்பிட்டி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.