Main Menu

தொழில் நுட்ப கோளாறு – இருளில் இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள்

நேற்று புதன்கிழமை இரவு இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.  Hauts-de-Seine மற்றும் Val d’Oise மாவட்டங்களில் மொத்தமாக 200,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. Cergy-Pontoise பகுதியில் உள்ள RTE துணை வழங்கு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  9:50 மணிக்கு மின்சாரம் ஒருசேர தடைப்பட்டது. சில நிமிடங்கள் நீடித்த இந்த மின் தடை பின்னர் வழமைக்குத் திரும்பியது. இணைய பாவனையாளர்கள் இது குறித்த பல புகைப்படங்களை காணொளிகளை இணையத்தில் பகிர்ந்துகொண்டனர்.