தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு – எடப்பாடி
தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு என திமுக செயல்படுவதாக முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்த தெரிவித்த அவர், தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.
தேர்தல் சமயத்தில் தி.மு.க அறிவித்த அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறினார்கள். தற்போது மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
கொரோனா பரவலை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்கிற தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்பும் இல்லை.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியதும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.