தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளு மன்றத்துக்குள் நுழையும் ஞானசர தேரர்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கொடி சின்னத்தில் போட்டியிட்ட எங்கள் மக்கள் கட்சி, தேசிய பட்டியலில் ஒரு இடத்தை பெற்றுள்ளது.
அதாவது குறித்த கட்சியின் தேசிய பட்டியலின் ஊடாகவே இம்முறை கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வாரென அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியினால் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.