தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை எதிர்த்து திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் குறிஞ்சி நகரில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு, அலுவலக கதவுகளை மூடிவிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடா புகாரில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.