திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா
திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார்.
திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.