Main Menu

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு பிணை

சமூக ஊடகங்களில் சில தகவல்களை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைதானவர் அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு பிணைகளில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பகிரவும்...
0Shares