தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவை ஆரம்பம்
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வாகன சாரதி மற்றும் நடத்துநருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மாத்திரமே பயணிகளை அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளை குளிர்சாதன வசதியின்றி இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளமையினால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளை முன்னெடுக்குமாறு நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...