தமிழகத்திலும் கொரோனாவின் புதிய திரிபு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய திரிபான டெல்டா பிளஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு வித்திடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறையின் முதன்மைச் செயலர் டொக்டர் ராதாகிருஷ்ணன், தெரிவிக்கையில், தீநுண்மிகள் தம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உருமாறிக் கொண்டேதான் இருக்கும்.
அந்தவகையில் தான் தற்போது டெல்டா பிளஸ்வகை பாதிப்பு தமிழகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அச்சப்படத் தேவையில்லை.
தடுப்பூசிகளை சரியாக செலுத்திக் கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று வரவில்லை. அவ்வாறு தொற்றுக்கு உள்ளான வெகு சிலருக்கும் கூட பாதிப்பு குறைவாகத்தான் இருந்துள்ளது.
டெல்டா பிளஸ் தொற்றுக்கு உள்ளான பெண் தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்தார்.
பகிரவும்...