தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பு
மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபூர கிராமசேவகர் பிரிவின் சன்ஹிந்த செவன வீட்டுத்திட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பொரள்ள 100 தோட்டம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கம்பஹா, நுவரெலியா, காலி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11 பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுதமத, ஹப்புகஸ்தலாவ, வீரபுர மற்றும் பஹல கொரகஒய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்டத்தின் பியகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யட்டிஹென கிராம சேவகர் பிரிவின் பொல்ஹேன வீதி, லேக்சிவ் வீதி மற்றும் வர்த்தக வலய வீதியின் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியபலாபெவத்த கிராம சேவகர் பிரிவின் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் இந்துருவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோனகல கிராம சேவகர் பிரிவின் பொல்துடுவ கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதிய வலதபிட்டி கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரிய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.