தடைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சிவாஜிலிங்கம் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதியில் நூற்றுக்கணக்கான படையினர், புலனாய்வாளர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் எவரும் நுழைய முடியாதபடி கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.