தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
தஜிகிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துஷான்பே நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 341 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் கடுமையாக குலுங்கிய நிலையில், பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேநேரம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
எனினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 7.03 மணியளவில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...