ஞானசார தேரர் விடுதலை
பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவதூறு வழக்கில் குற்றவாளியான அவர் 9 மாதங்களும் 3 வாரங்களும் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த அவர் நிலையில் பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் இன்றையதினம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலையாகியுள்ளார்.
அதேவேளை ஞானசார தேரரின் தயாரும் சிறைச்சாலை வாசலில் அவருக்காக காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது