ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை
ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியை ஏற்றுவதில் இருந்த முன்னைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த முடிவுக்கு அந்நாட்டின் 16 பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களும், தலைமை சுகாதார அமைச்சருடன் இணங்கியுள்ளனர். இதனால், அஸ்ட்ராசெனேகாவின் முதலாவது டோஸை பெற்றவர்களுக்கு விரைந்து இரண்டாவது டோஸை செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...