Main Menu

ஜனாதிபதி – கொழும்பு பேராயர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வௌியிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேராயருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இவ்வாறானதொரு சம்பவம் மீள நிகழாதிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக, ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

பேராயர் மற்றும் அனைத்து மதத்தலைவர்களினதும் கோரிக்கைக்கு அமைய தேவையான இடங்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.