Main Menu

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற தேசிய போர் வீரர் நினைவு நாள்

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து திங்கட்கிழமை (மே-19) 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டை போர் வீரர் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் திங்கட்கிழமை (மே-19) இடம்பெற்றன.

 

மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் யுத்தத்தை வெற்றி கொண்ட போது முப்படைகளின் தளபதிகளிகளாக பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, மார்ஷல் ஒப் த எயா போஸ் ரொஷான் குணதிலக, அத்மிரால் ஒப் த பிலிட் வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருடன் தற்போதைய பாதுகாப்பு படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

 

யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற முன்னாள் படை வீரர்கள் நிகழ்வில் ஆரம்பத்தில் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து முப்படை மற்றும் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதன் போது சர்வமத வழிபாடுகளும் இடம்பெற்றன. மத வழிபாடுகளின் பின்னர் ஜனாதிபதி உரையாற்றினார்.

 

ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து உயிர் நீத்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சரி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முப்படை தளபதிகள், தற்போதைய முப்படைகளின் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலாளர், உயிர் நீத்த படை வீரர்களின் உறவினர்களால் நினைவு தூபியின் முன் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. யுத்தத்தில் படை நீத்த படை வீரர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பகிரவும்...
0Shares