ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரு நிலைப்பாட்டில் இருந்து மக்களுக்கு பதில் வழங்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார்.
பாதுகாப்பு நிலமை தொடர்பில் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் தௌிவுபடுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.
நாட்டின் வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் 83 ஐ போன்ற இருண்ட யுகத்துக்கு இழுத்துப் பேட வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக் கொண்டுள்ளார்.