Main Menu

”ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் ஒரு­த­ரப்­பி­ன­ருக்கு வெற்­றி­ய­ளித்­தாலும் மக்கள் தோல்­வி­ய­டைந்­துள்­ளனர்”

ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் ஒரு தரப்­பி­ன­ருக்கு வெற்­றியை வழங்­கி­யி­ருந்­தாலும் மக்கள் தோல்­வி­யையே சந்­தித்­துள்­ளனர் என்றும் அதனை அவர்கள் விரைவில் உணர்ந்துகொள்­வார்கள் என்றும் தெரி­வித்­துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கம் மக்­க­ளுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்­படப் போவ­தா­கவும் கூறி­யுள்­ளது.

ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களின் பின்னர் விசேட ஊடக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ள அந்த இயக்கம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,  

ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் சார்பில் கள­மி­றங்­கிய கோத்­தபாய ராஜ­பக்ஷ வெற்­றி­பெற்­றுள்ளார்.தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் எமக்கு கிடைக்கப் பெற்­றுள்ள தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்பில் எம்மால் திருப்தி கொள்ள முடி­யாது. நாங்கள் எதிர்­பார்த்த பெறு­பேற்றை எங்­களால் அடைய முடி­யாமல் போயுள்­ளதை நாங்கள் ஏற்றுக்கொள்­கின்றோம்.

தேசப்­பற்­றுள்ள ஜன­நா­ய­கத்தை பிரதிபலிக்கும் அர­சியல் முகாம் என்ற வகையில் தேசிய மக்கள் சக்தி இம்­முறை தேர்­தலின்போது மக்­களை மையப்­ப­டுத்தி பாரிய செயற்­றிட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அதற்­க­மைய இலங்கை தேர்தல் மேடை­களில் இது­வ­ரையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த சேறு பூசல்கள், வெறுக்­கத்­தக்க பேச்­சுகள், சிறு­பிள்ளைத்தன­மான  வாக்­கு­று­தி­களை வழங்­கு­வதை விடுத்து நாட்டில் நிரந்­த­ர­மான கொள்­கையை கடைப்­பி­டிக்க நாம் நட­வ­டிக்கை எடுத்தோம்.

இந்த நட­வ­டிக்­கையில் பெரும் எண்­ணிக்­கை­யா­னோரை அணி­தி­ரட்ட எடுத்த நட­வ­டிக்­கை­யா­னது எமக்கு கிடைத்த நீண்­ட­கால வெற்­றி­யாகும். ஜனா­தி­பதி தேர்தல் மேடை­களில் சில கட்­சிகள் இனவாதத்தை பேசி ஒரு­வ­ருக்­கொ­ரு­வரை பய­மு­றுத்தும் முயற்­சி­களை முன்­னெ­டுக்­கையில், இன­வாதத்தை விடுத்து அர­சியல் மற்றும் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த பிர­சார மேடை­களில் எம்மால் முடிந்­தது.

இந்­நி­லைமை எதிர்­காலம் தொடர்­பான நல்ல சமிக்ஞை. ஜனா­தி­பதி தேர்­தலை பொறுத்­த­மட்டில்  வட­ப­குதி மக்கள் மத்­தி­யிலும் தென்­ப­குதி மக்கள் மத்­தி­யிலும் பயத்தை உரு­வாக்கி மக்­களை திசை­தி­ருப்பி தமக்கு வாக்­கு­களை பெற்றுக்கொள்­வ­தற்­காக இரண்டு அர­சியல் கட்­சி­களும் முயற்­சித்­தது என்­பது தெளி­வான விட­ய­மாகும்.

கொள்­கைகள் வாத­ப்பி­ர­தி­வா­தங்­க­ளி­னூ­டாக மக்­களை தெளி­வு­ப­டுத்தி அவர்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்கு நாங்கள் எடுத்த முயற்­சிகள் அனைத்தும் அக்­கட்­சி­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் பயன்­த­ராமல் போனது தெளி­வா­கி­யது. 

எது எப்­ப­டி­யா­யினும் இந்த தேர்தல் முடி­வு­களின்படி வெற்­றி­ய­டைந்த தரப்­பினர் தங்­க­ளு­டைய வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி கண்­டாலும், மக்கள் இதனால் தோல்­வி­யையே கண்­டுள்­ளனர். நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார அர­சியல் செயற்­பா­டுகள், கலா­சார முரண்­பா­டுகள் தொடர்பில் தற்­போது ஆட்­சிக்கு வந்­த­வர்­க­ளிடம் எந்­த­வித தீர்­மா­னமும் இல்லை. 

தாம் இது­வ­ரையும் வெற்றி பெற­வில்லை என்­ப­தையும், இனி­வரும் காலங்­களில் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்கள் விரைவில் புரிந்து கொள்­வார்கள். இவ்­வா­றான நிலையில் மக்கள் தொடர்­பான எமது கட­மையை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம்.

அதேவேளை தேர்தலின் போது  எந்தவித அரசியல் இலாபத்தையும் எதிர்பாராமல் எம்மோடு கைகோர்த்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், மக்கள் மத்தியில் நாம் களமிறக்கிய வேட்பாளர் தோல்வியடைந்திருந்தாலும் நாங்கள் சோர்வடையாமல் தொடர்ந்தும் எமது வெற்றிக்காக போராடுவோம்.

பகிரவும்...