Main Menu

சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்

“சுமந்திரம்” எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன.