சீகிரியாவை இலவசமாக பார்வையிட வசதி
சீகிரியா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவை இம்மாதம் 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பார்வை இடுவதற்கான வசதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
வெசாக் நோன்மதித் தினம் மற்றும் தேசிய தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக தினத்துக்கு அமைவாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
சீகிரியா பகுதிக்கு செல்லும் பொழுது காணப்படும் தொல்பொருள் கண்காட்சி மற்றும் கல்வி வேலைத்திட்டங்கள் பல இந்த 3 நாட்களிலும் மேற்கொள்ளப்படுவதாக கலாச்சார நிதியத்தின்சீகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிசாந்த தெரிவித்துள்ளார்.
சீகிரியாவின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவுக்கான பாதுகாப்புக்கு இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் சீகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்தார்.