சிறுவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதினால் ஏற்படும் பெரும் பாதிப்பு
ஐந்து வயதிற்கு குறைந்த சிறுவர்கள் தொலைக்காட்சியை பார்ப்பதற்காக நாளாந்தம் கூடிய கால எல்லை குறித்து உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக தொடர் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
இந்த வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலத்தை தொலைக்காட்சியை பார்ப்பதற்காக வழங்க கூடாது என்று சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த கால எல்லை மேலும் குறைக்கப்படுமாயின் அது மிகவும் சிறந்ததாகும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதே வேளை ஒரு வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு தொலைக்காட்சியை பார்ப்பதற்கு இடமளிக்க கூடாது.
ஆகக் கூடுதலான நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதினால் ஏற்பட கூடிய பாதிப்புகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விஷேட தகவல்களை வெளியிட்டுள்ளது. எந்தவித உடற்பயிற்சியும் இன்றி தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருப்பதினால் ஏற்படக் கூடிய பாதிப்பை தவிரப்பதற்கு இந்த ஆலோசனை முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது,