சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக வௌியாகிய தகவல் உண்மைக்குப் புறம்பானது – ஹிஸ்புல்லா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21ஆம் திகதி) நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கூறப்படும் சஹ்ரான் என்பவருடன் தனக்குத் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது என, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவரால் ஊடக அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
சஹ்ரான் என்பவரின் இயக்கத்திற்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது அனைத்து வேட்பாளர்களுடனும் சஹ்ரான் என்பவர் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட நிழற்படத்தை வைத்துக்கொண்டு தற்போது தன்மீது பழிசுமத்துவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.