சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் உயிரிழந்திருப்பதாக சகோதரி அச்சம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அவரது சகோதரி அச்சம் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சஹ்ரானின் சகோதரி இதனை தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து தமது குடும்பத்தை சேர்ந்த ஐவர் காணாமல் போனதாகவும், அவர்களில் தனது தந்தையும், மூன்று சகோதரர்களும், சகோதரியின் கணவரும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சஹ்ரான் உயிரிழந்ததை பொலிஸ் நிலையத்தில் காணப்பட்ட அவரது உடல் பாகங்களை கொண்ட ஒளிப்படங்களின் ஊடாக அடையாளம் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது துப்பாக்கி சூட்டில் சஹ்ரானின் தந்தையும் இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.