சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..!

சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி – 2015

பரிசு மொத்தம் இரண்டு இலட்சம் (200000) இலங்கை ரூபா..!

பாரிஸ் மாநகரிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் ”ரி. ஆர். ரி.”

தமிழ் ஒலி வானொலி நடாத்தும் தோழர் சபாரத்தினம் சுரேந்திரன்

ஞாபகார்த்தச் சர்வதேச ரீதியிலான சிறுகதைப்போட்டி – 2015

வானொலி, தொலைக்காட்சி, இலக்கியம் எனப் பெரிதும் பங்காற்றிய,

காலஞ்சென்ற தோழர் சபாரத்தினம் சுரேந்திரன் நினைவாக ”ரி. ஆர். ரி.”

தமிழ் ஒலி வானொலி இவ்வருடம் சர்வதேச ரீதியிலான சிறுகதைப்

போட்டியினை நடாத்த முன்வந்துள்ளது.

இப்போட்டியில் பரிசுக்குரியனவாகத் தெரிவுசெய்யப்படும்

கதைகளுக்கு மொத்தமாக இரண்டு இலட்சம் (200000) இலங்கை ரூபா

பரிசாக வழங்கப்படவுள்ளது.

முதலாவது பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்படும் கதைக்கு

ஒரு இலட்சம் (200000) ரூபா வழங்கப்படவுள்ளது.

சிறுகதைப் போட்டிக்கென வந்துசேரும் கதைகளில், ஒவ்வொரு

நாட்டிலிருந்தும் மூன்று கதைகள் வீதம் முதலில்

தெரிவுசெய்யப்பட்டுப், பின்னர் அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட

கதைகளிலிருந்து பரிசுக்குரிய முதல் மூன்று கதைகள்

தெரிவுசெய்யப்படும்.

அடுத்து ஆறுதல் பரிசுக்குரிய ஐந்து கதைகள் தெரிவுசெய்யப்பட்டுப்
பரிசுகள் வழங்கப்படும்.

பரிசுக்குரியனவாகத் தெரிவுசெய்யப்படும் கதைகள் நூலாகத்

தொகுக்கப்படும்போது மேலும் அடுத்த தரத்திலுள்ள சில கதைகளும்

நூலில் சேர்த்துக்கொள்ளப்படும்.

முதலாவது பரிசு : 1 இலட்சம் (100000) இலங்கை ரூபா

இரண்டாவது பரிசு : 50 ஆயிரம் (50000) ரூபா

மூன்றாவது பரிசு : 25 ஆயிரம் (25000) ரூபா

5 ஆறுதல் பரிசு : தலா 5 ஆயிரம் (5000) ரூபா

1. படைப்பாளிகள் எங்கும் பிரசுரமாகாத, தங்களது எத்தனை

கதைகளையும் அனுப்பலாம்.

2. கதைகளை எமது ஈமெயில் முகவரிக்கோ அல்லது தபால்

முகவரிக்கோ அனுப்பவும்.

3. கதைகள் 5 பக்கத்திற்குக் (A 4) குறையாமலும் 10 பக்கத்திற்கு

மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

4. எந்த நாட்டிலிருந்தும் படைப்புகளை அனுப்பலாம்.

5. படைப்பாளியின் விபரங்களும் (பெயர் – முகவரி) கதை எங்கும்

(பத்திரிகை – சஞ்சிகை – இணையத்தளம்) பிரசுரிக்கப்படவில்லையென

உறுதிசெய்தும் வேறாகக் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.

6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

படைப்புகளை அனுப்பவேண்டிய முடிவுத் திகதி : 30 – 04 – 2015

படைப்புகள் அனுப்பவேண்டிய முகவரி :

e-mail : trtstory@hotmail.com

T R T TAMIL OLLI

APT. : C – 7,

75, RUE RÂTEAU,

93120 LA COURNEUVE,

FRANCE.

———————————————–

விபரங்களுக்கு : WWW.TAMILOLLI.COM(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !