Main Menu

அண்ணாமலை பல்கலைக்கழகம் – பாரிசு : 2018ஆம் ஆண்டுக்கான பரீட்சை

பேராசிரியர்.ச. சச்சிதானந்தம் அவர்களின் Institut International des Etudes Supérieures கடந்த 18 ஆண்டுகளாக ஐரோப்பியத் தமிழர்களுக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகப் பீ.ஏ., எம்.ஏ.பட்டதாரிகளை உருவாக்கி, பலதுறைகளில் பட்டப் படிப்புக்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே ! அந்நிறுவனம் 2018ஆம் ஆண்டுக்கான பரீட்சை ஜுலை 19 முதல் ஆகஸ்ட் 2 வரை இடம்பெறுகிறது. இவ்வாண்டு தமிழ், பரதநாட்டியம், சமூகவியல், அரசியல் விஞ்ஞானம், சட்டவியல், ஆங்கிலம் கற்பித்தல் மற்றும் எம்.பீ.ஏ. ஆகிய பட்டங்களுக்கான பரீட்சை நடைபெறுகிறது. இப்பரீட்சையில் நோர்வே, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மாணவர்கள் தோற்றுகிறார்கள். இப்பரீட்சைக்கான பரீட்சகராக. பேராசிரியர், இரா. சுந்தரவரதராஜா அவர்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து பாரிசு வந்திருக்கிறார்.

அத்துடன் பிரான்சில் பட்டபடிப்புகளை வழங்கும் வகையில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகமும் பிரான்ஸ் பன்னாட்டு கல்வி நிறுவனமும் இணைந்து கல்வி மற்றும் பண்பாட்டு பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் பட்டயபடிப்புகளை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளன என்பதையும் அறியத்தருகின்றோம்.

பேரா .ச. சச்சிதானந்தம்

பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம்

அண்ணாமலை பல்கலைக்கழகம் – ஐரோப்பிய மையம்.

70. Rue Philippe de Girard
75018 Paris.
01 46 0716 00

பகிரவும்...