சர்வதேச உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று
புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர் மார்பு புற்று நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும்.
வருடாந்தம் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றனர்.
இவர்களில் ஒரு மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பதால் உயிரிழக்கின்றனர்.இப்போதிலிருந்தே செயற்படாவிட்டால் 21ம் நூற்றாண்டில் புகையிலை பாவனையால் பில்லியன் கணக்கான உயிர்களை இழக்க நேரிடும் என புகையிலை மற்றும் மதுபானம் சார்வ தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையிலும் புகையிலை பாவனை காரணமாக வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை உடலின் அனைத்து பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விளக்கமளிப்பு நிகழ்ச்சித் திட்டம் காரணமாக புகைப்பிடித்தல் 14.5 சதவீதம் வரை குறைந்திருப்பதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பாலித்த அபயகோன் தெரிவித்துள்ளார்.
இந்த அளவை 10 சதவீதம் வரை குறைப்பது அதிகார சபையின் இலக்காகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.