குண்டுவெடிப்புகளை அடுத்து இலங்கையில் சமூக ஊடகங்களை முடக்க அரசு நடவடிக்கை
சிறிலங்காவில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்தே சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து போலியான – உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சிறிலங்கா முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளதுடன், மோதல்கள் ஏற்படக் கூடிய சூழலும் தோன்றியுள்ளது,
இந்த நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் சமூக ஊடகங்களான முகநூல், வட்ஸ்அப், வைபர் போன்றவற்றை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், சிறிலங்காவில் இந்த தடை இந்தச் செய்தி எழுதப்படும் வரை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.