Main Menu

சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன. ஆரோக்கியமான மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் பரவலாக பரவக்கூடிய மற்றும் சமூக இடைவெளி குறைந்த பொது போக்குவரத்து, கடைகள் அல்லது பிற வரையறுக்கப்பட்ட அல்லது நெரிசல் ஏற்படும் சூழல் போன்றவற்றில் முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கங்கள் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் மருத்துவ முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.