சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப் பொதி – அரசாங்கம்
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த பொதிகளில் 10 அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி வெள்ளை நாட்டு அரிசி, சிவப்பு அரிசி, கோதுமை மா, பருப்பு, நூடில்ஸ்,சீனி, 200 கிராம் கருவாடு, 100 கிராம் தேயிலை, ஒரு பக்கெட் உப்பு மற்றும் முக்கவசம் ஆகியவை அடங்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.