சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான “மகாராஷ்டிர விகாஸ் முன்னணி” அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
ஆளுநர் பகத்சிங் கோஷியாரின் உத்தரவுக்கமைய குறித்த நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு 169 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
பெரும்பான்மைக்கு 145 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக 169 உறுப்பினர்களின் ஆதரவோடு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பா.ஜ.க உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.