Main Menu

சஜித்திற்கு கொரோனா: மூடப்பட்டது எதிர்க்கட்சி அலுவலகம்

சஜித் பிரேமதாசவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) முதல் மூடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது சஜித் பிரேமதாசவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 15 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் நாடாளுமன்றத்தின் இரண்டு ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...
0Shares