சசிகலா விரைவில் விடுதலை செய்யப் படுவாரா? : சிறை நிர்வாகத்திடம் மனு அளிக்கப் பட்டுள்ளதாக தகவல்!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கிடையே அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தையும் கடந்த மாதம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என அவர் சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளதாகக் தெரியவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து சிறை நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதேவேளை விடுமுறை நாட்களை கழித்துவிட்டு சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா? என்பது குறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சட்ட ஆலோசனை சசிகலாவுக்கு சாதகமாக அமைந்தால் அவர் இந்த மாதத்திலேயே விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...