சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள்
யாழ். இந்திய உதவித்தூதரகம் மற்றும் யாழ். மாவட்ட சங்கிலியன் மன்னன் அறக்கொடை நிலையத்தின் ஏற்பாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க புராதான மன்னாக விளங்கிய சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று முதல் முறையாக பருத்தித்துறை வீதியில் உள்ள அமைந்துள்ள யாழ்ப்பாண நல்லுர்ர் சங்கிலியன் மன்னனின் நினைவு தூவியில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதுவர் சங்கர் பாலசந்திரன், யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் தென் இந்திய நாட்டின் சென்னை இலக்கிய புராண கலைநிலை போராசிரியர் தங்கவேல் குமராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், அறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.